இந்தியா- இங்கிலாந்து முதல் டெஸ்ட்: ஐதராபாத்தில் இன்று தொடக்கம்

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது.

இந்திய அணி கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் டெஸ்டில் விளையாடியது. டிசம்பர் 26 முதல் ஜனவரி 4 வரை நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிவடைந்தது.

இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் ஆஷஸ் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-2 என்ற சமநிலையில
முடிந்தது.

உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி முதல் 2 போட்டியில் தனிப்பட்ட காரணத்துக்காக விளையாடவில்லை. இது பேட்டிங்கில் சற்று பாதிப்பை ஏற்படுத்தலாம். அவருக்கு பதிலாக ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *