தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம் பெற்றது.
இச்சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையில் தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர், முதற் தடவையாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.