டாடா குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 2024-28 ஆம் ஆண்டு வரை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டைட்டில் உரிமையைப் பெற்றுள்ளது.
அதன்படி, 2500 கோடி இந்திய ரூபா பணத்துக்கு செல்வம் நிறைந்த லீக்குடனான தொடர்பை டாடா புதுப்பித்துள்ளது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், 2022 ஆம் ஆண்டில் விவோவிடமிருந்து டாடா குழுமம் ஆரம்பத்தில் ஸ்பான்சர்ஷிப்பைப் பெற்றது.
டாடா குழுமம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் ஐ.பி.எல். இன் டைட்டில் ஸ்பான்சராக இருந்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சாத்தியமான ஏலதாரர்களுக்கு கடுமையான நிபந்தனைகளை வகுத்துள்ளது.
பிசிசிஐ சனிக்கிழமையன்று (20) இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமையை டாடா குழுமத்திற்கு ஐந்தாண்டு காலத்திற்கு வழங்கியது.