ஹட்டன் பகுதியில் இன்றைய தினம் (21.01) தைத்திருநாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தது.
அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்னிந்தியாவின் பிரபல நடிகைகள் அழைக்கப்பட்டிருந்ததை கவனிக்கக்கூடியதாக இருந்தது.
அண்மையில் திருகோணமலையிலும் தேசிய பொங்கல் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ஜல்லிகட்டு போட்டிகள் என இந்தியர்களின் பாராம்பரியங்கள், கலாச்சாரங்கள் இலங்கையிலும் கடைபிடிக்கப்பட்டன.