இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் நிர்வாக செயலாளர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் நேற்றைய தினம் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினர்.