இன்று திருகோணமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.
இத்தெரிவுத் தேர்தலின் மற்றைய வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஆ சுமந்திரன் 137வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இத்தேர்தலின் போது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 321.