பிரபல நடிகர் ஆமிர் கான், 58 வயது நிரம்பிய ஆமிர் கானுக்கு ஈரா கான் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 3ம் தேதி மும்பையில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.
ஜனவரி 3 ஆம் தேதி மும்பையில் ஈரா கான் மற்றும் நூபுர் ஷிகாரே ஆகிய இருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். ஈரா கான், நடிகர் அமீர் கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி ரீனா தாத்தாவின் மகள் என்பது.குறிப்பிடத்தக்கது மிகவும் எளிய முறையில், நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்து இந்த திருமணம் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா அவர்கள் இந்த திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். கருப்பு நிற ஆடை அணிந்து அவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.