குஜராத் மாநிலம் வதோரா நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஹார்னி என்ற ஏரியில் நேற்று இருபதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், 4 ஆசிரியர்களுடன் படகு பயணம் மேற்கொண்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 14 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என 16 பேர் உயிரிழந்தனர்.
மீட்பு படையினரும் தீயணைப்பு படையினரும் எஞ்சியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட ஒரு மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
ஏரியின் அடிப்பகுதியில் சேறுகள் இருப்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
படகில் எத்தனை பேர் பயணித்தார்கள், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் பேர் பயணித்தார்களா, சுமார் 30 பேரை ஏற்றிச் செல்லும் அளவுக்கு படகு திறன் கொண்டதாக இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்து தொடர்பாக முதலமைச்சர் விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.