பிரித்தானிய நாடாளுமன்றத்தில் 15.01.2024 திங்கட்கிழமை நடந்த தமிழர் திருவிழாவாம் தைப் பொங்கல் விழாவில் இராவணன் பெருமை சொல்லும் ஈழநாட்டியம் அரங்கேறியது.
இராவணன் பெருமை சொல்லும் ஈழநாட்டியம்
எல்லோரும் இராமனைப் பற்றிப் பேசும் இந்த நாட்களில் இராவணன் பெருமை சொல்லும் ஈழநாட்டியம் நம்மவர் நடனமாய் “நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் ” என நம் கலாசார அடையாளமாய் அரங்கேறியமை வரலாற்றில் தடம் பதித்த நிகழ்வாய் அமைந்தது.
லண்டனில் நடன ஆசிரியையாய் பணி செய்யும் ரகுப்பிரியாவும் அவர் மாணவர்கள் இருவரும் இந்த நிகழ்வில் நம் ஈழநாட்டியத்தை அரங்கேற்றியிருந்தனர்.