சில நாட்களாக 2,000 ரூபாவையும் தாண்டி விற்பனை செய்யப்பட்ட கரட் விலை இன்று 1,000 ரூபாவாக குறைந்து பேலியகொடை வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று வியாழக்கிழமை (18) பேலியகொடை சந்தையில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் மரக்கறிகளின் மொத்த விலை விபரம்
பேலியகொடை வர்த்தக நிலையத்தில் இன்றைய தினம் சில மரக்கறிகளின் மொத்த விலை விபரம் வருமாறு,
கரட் 1,000 ரூபா முதல் 1,200 ரூபா வரை,
போஞ்சி 550 ரூபா முதல் 600 ரூபா வரை,
கோவா 600 ரூபா முதல் 650 ரூபா வரை,
தக்காளி 200 ரூபா முதல் 300 ரூபா வரை, லீக்ஸ் 400 ரூபா,
கத்திரிக்காய் 550 ரூபா முதல் 600 ரூபா வரை,