ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரும் காதலிப்பது உண்மை என்று உணர்த்தும் விதமாக ஒரு சில செயலை செய்து வருகிறார்கள்.
அவர்கள் இருவரும் வியட்நாம் சென்ற போது எடுத்துக்கொண்ட ஒரு சில புகைப்படங்களை வெளிட்டுள்ளனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்தேவரகொண்டா ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார்.
தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததையடுத்து பெண்களின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. பின்னர் தமிழில் நோட்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
கீதா கோவிந்தம் படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கும் இவருக்கும் இடையில் காதல் இருப்பதாக இணையவாசிகளால் அதிகமாக பேசப்பட்டு வந்தது. விடுமுறை கழிப்பதற்காக மாலத்தீவு சென்றனர் மற்றும் பண்டிகை என்றால் ஒரே வீட்டில் இருந்து புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டு இருந்தார்கள்.
அவர்கள் இருவருக்கு வருகிற பெப்ரவரி மாதம் 2 ஆம் வாரத்தில் நிச்சயதார்த்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அது எந்தளவிற்கு உண்மையான விடயம் என்பது யாருக்கும் தெரியாது.
இருவரும் உத்தியோகபூர்வமான இதுவரையில் தெரிவிக்கவில்லை. எனினும் தற்போது இருவரும் விடுமுறைக்காக வியட்நாம் சென்றுள்ளார்கள்.
வியட்நாமிற்கு சென்ற போது ராஷ்மிகா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.