இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபத்திற்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.இந்தப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் முதல் இரண்டு போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
இந்த நிலையில், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் போட்டியின் வெற்றியை தீர்மானிப்பதாக அமைகின்றது.