அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் கிழக்கு மாகாண ஆளுனரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் காளை சீறிப்பாய்ந்து வெற்றி பெற்றது.
அமைச்சர் மூர்த்தியால் அலங்கா நல்லூரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில், வெற்றிபெற்ற செந்தில் தொண்டமானின் காளைக்கு தங்க நாணயத்தை பரிசாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செந்தில் தொண்டமானிடம் கையளித்தார்.