வாழைப்பூவில் கல்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
♦ வாழைப்பூவின் முதல் நன்மையாகப் பார்க்கப்படுவது பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்யும். வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்னைகளுக்கு சரியான தீர்வாகும்.
♦ ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்புகளை சரிசெய்யும். மேலும் ரத்த ஓட்டம் சீராகும்.
♦ வயிற்று வலி உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிடலாம்.
♦ உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டது.
♦ ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிடலாம்.
♦ நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து என்று சொல்லலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
♦ மூலப் பிரச்னைகளுக்கும் வாழைப்பூ சிறந்த மருந்து.
எப்படி சாப்பிடலாம்?
♦வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு வாழைப்பூவை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும்.
♦ உப்பு போட்டு அவித்தோ, பொரியல் செய்தோ, பருப்பு போட்டு கூட்டு செய்தோ சாப்பிடலாம்.
♦ வாழைப்பூவை வேகவைத்து சாறையும் பருகலாம்.
♦ வாரத்திற்கு இருமுறை சாப்பிடலாம்.