இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது ஓவர் போட்டியில் சிம்பாப்வே அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் Charith Asalanka அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும், Angelo Mathews 66 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் Muzarabani மற்றும் Luke Jongwe ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதற்கமைய 174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அந்த அணி சார்பில் Craig Ervine அதிகபட்சமாக 70 ஓட்டங்களையும், Luke Jongwe மற்றும் Brian Bennett ஆகியோர் தலா 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Maheesh Theekshana மற்றும் Dushmantha Chameera ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணியும் சமநிலையில் உள்ளன.