அனுராதபுரம் பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரக்கறிகளின் விலை உயர்வால் அனுராதபுரம் பொதுச் சந்தைக்கு வந்த பெருந்தொகையான நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1500.00 ரூபாவாகவும் சில்லறை விலை 1700.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்தார்.