நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தலைமையில் 2024 ஜனவரி 12 ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2024 ஆம் ஆண்டுக்கான பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மற்றும் பெறப்பட்ட திட்ட முன்மொழிவுகள் குறித்து இங்கு ஆரம்பத்தில் கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் பெறப்பட்ட கடிதங்களும் கலந்துரையாடப்பட்டன.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம். ராமேஸ்வரன், முதலியோர்
அரசியல் பிரதிநிதிகள் மத்திய மாகாண பிரதம செயலாளர் திரு.அஜித் பிரேமசிங்க, நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.