ராடான் மீடியா ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் நெடும் தொடர் தாயம்மா. இத்தொடருக்கான தலைப்பு பாடலை இசையமைப்பாளர் C.சத்யா இசையில் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.
தாயம்மா நெடுந்தொடர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.
ராடன் நிறுவனத்தின் தயாரிப்பில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஏற்கனவே ஒளிபரப்பான ஜமீலா நெடுந்தொடருக்கும் பொத்துவில் அஸ்மின் பாடல்கள் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.