சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமாறு ஒருநாள் போட்டியில் வெற்றிப் பெற்று இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
சிம்பாப்வே அணி சார்பில் Joylord Gumbie அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
போட்டியில் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் இலங்கை அணிக்கு 27 ஓவர்களில் 97 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் குசல் மெந்திஸ் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த போட்டித் தொடரில் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் இரண்டாது மற்றும் மூன்றாவது போட்டிகளில் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.