கினிகத்தேன பகுதியில் சடலமாக ஒருவர் மீட்பு..

கினிகத்தேன பொலிஸ் பிரிவில் உள்ள கெனில்வத்தை 2 ம் பிரிவில், நேற்று மதியம் 11 .30 மணியளவில் தனது தந்தைக்கு விறகு சேகரிக்க சென்ற 46 வயது உடைய திருமணம் முடித்த சுப்புன் நாமல் என்பவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு 8 .30 மணியளவில் மகனை காணவில்லை என புகார் ஒன்றை பதிவு செய்தார்.


அதனைத் தொடர்ந்து கினிகத்தேன பொலிசார் கெனில்வத்தை 2 ம் பிரிவில் உள்ள வனப்பகுதியில் இன்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது விறகு சேகரிக்க சென்ற நபர் ஓடையில் சடலமாக கிடப்பதை கண்டு, அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இன்று காலை 10 மணிக்கு அவரது சடலம் கிடந்த இடத்திற்கு அவரது தந்தை சென்று பார்த்த பின் மகன்தான் என அடையாளம் காட்டிய பின்னர் சடலம் கிடந்த பகுதிக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் நாவலப்பிட்டி நீதிமன்ற நீதவான் சென்று பார்வையிட்ட பின்னர் சடலம் கினிகத்தேன மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
கினிகத்தேன பொலிசார் புலன்விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *