இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியை இலவசமாக காணும் வாய்ப்பு கிரிக்கட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.
நாளை (11.01.2024) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் C&D பிரிவுகள் இவ்வாறு பார்வையாளர்களுக்காக இலவசமாக திறக்கப்பட்டுள்ளன.
பார்வையாளர்கள் நுழைவதற்காக நுழைவு வாயில்கள் பிற்பகல் 01.00 மணிக்கு திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
T20 போட்டியைக் காண www.srilankacricket.lk மற்றும் பிரேமதாச மைதானத்தில் உள்ள இலங்கை கிரிக்கெட் கரும பீடத்தில் டிக்கெட்டுகளை வாங்கலாம் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
மேலும், காலை 09.00 மணி முதல் மாலை 05 மணி வரை டிக்கெட் கரும பீடம் திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி 14, 16 மற்றும் 18 ஆகிய திகதிகளில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.