ஹட்டன் நோர்வூட் பிரதான சாலையில் அமைந்துள்ள கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் நிழற்குடை இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக நெடுஞ்சாலையில் சிறிய அளவில் உள்ள நிழற்குடை முறையாக அமைக்கப்படாததால் கர்ப்பிணி பெண்கள்,நோயாளிகள் மழைகாலங்களிலும் கோடை காலங்களில் பாரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
வைத்தியசாலைக்கு உள்ளே செல்லும் பிரதான வழியிலும், வெளியேறும் இரு பகுதியில் உள்ள பிரதான வீதியிலும் , சுமார் 20 க்கு மேற்பட்ட நோயாளிகள் அமர்ந்து இருந்து பேருந்துகளில் பயணிக்க வழி செய்து கொடுக்க முன் வர வேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை ஹட்டன் நகர சபை-நோர்வூட் பிரதேச சபை முன் வந்து உடன் செப்பனிட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.
தற்போது இப் பகுதியில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.