வடமராட்சி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 70 குடும்பங்களுக்கு குடத்தனை வடக்கை சேர்ந்த தொண்டு நிறுவனமான அகரம் நிறுவனத்தால் “பொங்குவோம் பொங்கவைப்போம்” என்ற தொனிப் பொருளில் பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மருதங்கேணி பிரதேச செயலகத்தில்,குறித்த நிகழ்வில் வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி.ரேவதி,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாள வட. கி பா.நிர்மலன்,சமூக சேவை உத்தியோகத்தர் வட.கி ப.பரதன்,பிரதம முகாமைத்துவ உத்தியோகர் பி.சுதாகினி,அகரம் உதவும் கரங்கள் தலைவர் ஜே.மதியழகன் யோக சம்பந்தக் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அகரம் நிறுவனத்தால் ஒவ்வொரு வருடமும் பொங்குவோம் பொங்கவைப்போம் என்ற தொனிப் பொருளில் பொங்கல் பானைகள்,பொருட்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.