சர்வதேச விருது வென்ற இளங்கோ ராம்..!!

சமீபத்தில் எஸ்டோனியா (ESTONIA) நாட்டில் நடைபெற்ற டல்லின் ப்ளாக் நைட்ஸ் (Tallinn Black Nights Festival ) விருது வழங்கல் நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த பிரபல தமிழ் இயக்குநர் இளங்கோ ராம் விசேட ஜூரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இயக்குநர் இளங்கோ ராம் இலங்கையில் விளம்பரப் படங்கள், குறும்படங்கள், சினிமா படங்கள், என ஏராளமான படைப்புகளை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னரும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.

இயக்குநர் இளங்கோ ராம் இயக்கிய டெண்டிகோ எனும் சிங்கள படத்திற்கே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் இருந்து போட்டிக்கு வந்த திரைப்படங்களில் இருந்து டெண்டிகோ படம் தெரிவு செய்யப்பட்டு,மேற்படி விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திரைப்படத்தினை பிரபல தென்னிந்திய தமிழ் சினிமா இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் அவர்களின், Stone Bench நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழில் இயக்கவுள்ளமை விசேட அம்சமாகும்.

இத்திரைப்படத்தினை இலங்கையின் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஹிரன்யா தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹிரன்யா , இளங்கோ ராமின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் விருது வென்றுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

விருது வென்று இலங்கை நாட்டிற்கு பெருமை சேர்த்த இளங்கோ ராமுக்கு வைஃப்ஸ் நியூஸ் தமிழின் வாழ்த்துகள்..

டெண்டிகோ திரைப்பட டீசரை நீங்களும் பார்வையிடலாம். 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *