ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து நடத்தப்பட்டு பல சேவைகள் தற்போது இல்லை.
கடந்த 50 ஆண்டு காலம் சேவையில் ஈடுபட்டு வந்த அதிகாலை வேளையில் சாமிமலை கண்டி அரச பேருந்து சேவைகள் கடந்த பல மாதங்களாக இடை நிறுத்த பட்டு உள்ளது.
இதனால் இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக நாவலப்பிட்டி,கம்பளை, பேராதெனிய,கண்டி வைத்திய சாலைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயணிகள் இவ்வாறு சிறமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சிவனடிபாத மலை புனித பூமியில் இருந்து கதிர்காமம் வரை சேவையில் ஈடுபட்டு வந்த ஹட்டன் அரச பேருந்து சேவை இடை நிறுத்தப்பட்டு நுவரெலியா ஹட்டன், ஹட்டன் கதிர்காமம் என்ற சேவை ஆரம்பிக்க பட்டு நல்லதண்ணி கதிர்காமம் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
ஹட்டன் பேருந்து நிலையம் நடத்திய மஸ்கெலியா அம்பாறை சேவைகள் இடை நிறுத்தப்பட்டு உள்ளது.ஹட்டன் அரச பேருந்து நிலையம் நடத்திய மஸ்கெலியா திருகோணமலை பேருந்து சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பல சேவைகள் இடை நிறுத்தப்பட்டு உள்ளதால் மக்கள்,பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரியிடம் கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பேருந்துகள் இருந்த போதிலும் நடத்துனர், சாரதிகள், பழுது பார்த்தல், நடவடிக்கைக்கு பாரிய அளவில் வெற்றிடம் நிலவுகிறது.
இது குறித்து உயர் மட்ட அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் பலன் இல்லை என்று கூறினார்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை மாணவர்கள் நோயாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கடந்த காலங்களில் இருந்த அரச பேருந்துகள் மீண்டும் சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.
நெடுந்தூர குருந்தூர சேவைகள் முறையாகவும் அதிகளவில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்