நடிகர் விஷால் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் வெளிநாட்டிலிருந்து இன்று (ஜன.09) சென்னை திரும்பிய நடிகர் விஷால் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அங்கு அஞ்சலி செலுத்தினார் அவருடன் நடிகர் ஆர்யாவும் உடன் இருந்தார்.
அங்கு வந்த பொதுமக்களுக்கு விஷால் உணவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் பேசுகையில், “கலையுலகம் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் நல்ல மனிதர் என்று பேர் வாங்கிய ஓர் அரசியல்வாதி, துணிச்சலான அரசியல்வாதி என்று பெயர் வாங்கியவர் விஜயகாந்த். பொதுவாக ஒரு நல்ல மனிதர் இறந்த பிறகுதான் சாமி என்று சொல்வோம். ஆனால் விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே சாமி என்று அழைக்கப்பட்டவர்.