காதலித்த நடிகையின் கடைசி ஆசை.. .. பார்த்தவுடன் உயிர் பிரிந்தது.. கதறி அழுத கமல்..
சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக நடிப்பில் சிறந்தவர் என புகழப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் இதுவரை 232 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டாகி 500 கோடி ரூபாய்வரை வசூலித்தது. தற்போது இந்தியன் 2வில் நடித்துவரும் கமல் ஹாசன் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்திலும், மணிரத்னம் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
கமல் ஹாசன் வெறும் நடிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்துபவர். அதனால்தான் எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் நாங்கள் இப்போது செய்வதை கமல் சார் அப்போதே செய்துவிட்டார் என்று ஏகத்துக்கும் புகழ்கிறார்கள். நடமாடும் சினிமா பல்கலைக்கழகம் எனவும் அவர் தற்கால தலைமுறையினரால் போற்றப்படுகிறார்.
நடிப்பு, இயக்கம் என எதுவாக இருந்தாலும் தைரியமாக செய்யும் கமல் ஹாசன் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்படி இருந்தவரே. குறிப்பாக தனது திருமண வாழ்க்கை பல விமர்சனங்களை சந்தித்தாலும் சரிகா, வாணி கணபதி என இருவரை திருமணம் செய்துகொண்டார். இருவரையும் பிரிந்து கௌதமியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து பிறகு பிரிந்தார்.
திருமண வாழ்க்கை என்பதை தாண்டி காதலிலும் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர் கமல். அவர் ஒரே நேரத்தில் ஆறு நடிகைகளுடன் காதலில் இருந்ததாக குட்டி பத்மினி சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அந்தப் பேட்டியில் நடிகை ஸ்ரீவித்யா கமல் ஹாசனை தீவிரமாக காதலித்தார். தான் எவ்வளவு சொல்லியும் ஸ்ரீவித்யா கேட்கவில்லை. கமல் ஹாசன் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டது ஸ்ரீவித்யாவை ரொம்பவே பாதித்ததாகவும் குறிப்பிட்டார்.
நிலைமை இப்படி இருக்க ஸ்ரீவித்யாவின் கடைசி ஆசையை நிறைவேற்றி கமல் ஹாசன் கதறி அழுத சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது, கமல் ஹாசன் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்ட பிறகு சில காலம் தனியாக இருந்த ஸ்ரீவித்யா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த உறவு பாதியிலேயே முடிந்தது. அதன் பிறகு யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கி கேரளாவில் இருந்த அவருக்கு புற்றுநோய் பாதிப்பு வந்ததாம்.
புற்றுநோய் வந்த பிறகு உடல்நலம் மிகவும் மோசமடைய அவரிடம் உங்களது கடைசி ஆசை என்னவென்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஸ்ரீவித்யாவோ கமல் ஹாசனை பார்க்க வேண்டும் என கூறியிருக்கிறார். இந்தத் தகவல் கமலுக்கு போக உடனடியாக அவரும் கேரளாவுக்கு விரைந்திருக்கிறார். கமல் வந்ததை அறிந்த ஸ்ரீவித்யா; கமலை தவிர்த்து உள்ளே யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
உள்ளே சென்ற கமல் ஹாசன் ஸ்ரீவித்யாவை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். ஏனென்றால் எப்படிப்பட்ட அழகியாக இருந்து பல ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீவித்யா புற்றுநோயால் உடல் உருக்கப்பட்டு கட்டிலில் சுருண்டு கிடந்திருக்கிறார்.
அதை தாங்கிக்கொள்ள முடியாத கமல் ஹாசன் அங்கேயே கதறி அழ ஆரம்பித்துவிட்டாராம். அதன் பிறகு கமல் ஹாசனை பார்த்த சில மணி நேரத்திலேயே ஸ்ரீவித்யாவின் உயிர் பிரிந்திருக்கிறது. இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். நடிகை ஸ்ரீவித்யா கமல் ஹாசனுடன் அன்னை வேளாங்கண்ணி, உணர்ச்சிகள், அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.