மகரந்தம் கலை இலக்கிய மன்றம் , யோகம்மா கலைக்கூடம் என்பன முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்திய ஈழத்து இசை குயில் உதயசீலன் கில்மிஷாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சமீபத்தில் முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று ZEE தமிழ் தொலைக்காட்சியில் “சரிகமபா” இசை நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றியீட்டி “Little Champion” என்ற பட்டத்தையும் பெற்று கில்மிஷா எமது நாட்டிற்கு பெருமையை தேடி தந்தமை மட்டுமன்றி அவரது தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற பல்வேறு ஆளுமைத்திறன்கள் எமது நாட்டின் சிறுவர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது .
இந் நிகழ்வில் சிறுவர்களின் ஆடல் பாடல் முதலான கலை நிகழ்ச்சிகள் மற்றும் அதிதிகளின் வாழ்த்துரைகள் மற்றும் கில்மிஷாவிற்கான கௌரவிப்புக்கள் என்பனவும் சிறப்புற இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.குணபாலன், பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், மகரந்தம் கலை இலக்கிய மன்றத்தினர்,யோகம்மா கலைக்கூடத்தினர், இசை ஆர்வலர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.