மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஓல்டன் தோட்ட 10 நம்பர் பிரிவில், நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்காக இருந்த 300 கிலோ லீக்ஸ் கொள்ளையடித்து நோர்வூட் நகரில் விற்பனை செய்த இருவரை மஸ்கெலியா பொலிசார் கைது செய்து உள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
கடந்த 6 ம் திகதி இரவு கவரவலை தோட்டத்தில் வசிக்கும் ஜெயசீலன் நந்தகுமார் மற்றும் காளிமுத்து அனுஷ் காந்தன் ஆகிய இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது, தாங்கள் இருவரும் அதனை நோர்வூட் நகரில் விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
நேற்று சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் வினாயகமூர்த்தி முன்னிலையில்
ஆஜர்படுத்தபட்டபோது எதிர் வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சாமிமலை 10 நம்பர் பிரிவில் உள்ள முத்துலிங்கம் பாக்கியநாதன் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்