கனடாவின் ரொறன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை நீடிக்குமென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ரொறன்ரோவில் நாளை (09.1.2023) பனிப்புயல் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை எதிர்வரும் புதன்கிழமை வரை நீடிக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பனிப்பொழிவானது சுமார் 15 சென்றிமீற்றர் வரையில் பொழியும் என்பதுடன் மழை வீழ்ச்சி 30 மில்லிமீற்றர் வரை காணப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
பனிப்புயல் நிலைமைகளின் போது மணிக்கு 40 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.