ஸ்ரீ பாத தரிசிப்பதற்க்காக வந்திருந்த பெண் ஒருவர் சீதகங்குள ஓயாவில் நீராடச் சென்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சிவனடி பாத மலைக்கு யாத்திரைக்கு யாத்ரீகர் குழுவுடன் வந்த பெண் ஒருவர் நேற்று (06) இரவு 07.00 மணியளவில் நல்லதண்ணி நகரின் வாகன தரிப்பிடத்திற்கு கீழே ஓடும் சீதா ககுல ஓயாவில் படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
பனாகொட, பன்னிமுல்ல, பரணவல பகுதியைச் சேர்ந்த பி.எல்.மலானி என்ற 58 வயதுடைய பெண்ணே தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்த பெண் உடனடியாக நல்லதண்ணி சுகாதார சேவை நிலையத்தின் அம்பியூலன்ஸ் மூலம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் நடைபெற உள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.