மட்டக்களப்பு நகரில் 48 கோடி செலவில் தபாலக கட்டிட தொகுதியை அமைச்சர் பந்துல குணவர்தன திறந்து வைத்தார்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் தபால் சேவை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு இந்த மாகாண தபாலக கட்டிட தொகுதி அமைக்கப்பட்டது.
மாகாண பிரதி அஞ்சல் மாஅதிபர் முகமத் அஸ்லம் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியா கலந்துகொண்டு இந்த புதிய அஞ்சல் கட்டிட தொகுதியை ரீதியாக திறந்து வைத்தார்.
இத்திறப்பு விழா வைப்பவத்தில் ஊடகத்துறை ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் சிவனேசன் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ முரளிதரன் மற்றும் மத குருமார்கள் அரசாங்கத் திணைகள் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.