இந்த ஆண்டிற்கான உலகக் கிண்ண டி20 தொடர் வரும் ஜூன் 1-ம் திகதி ஆரம்பமாகி 29-ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அணிகளின் பட்டியலையும் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். கடந்த 2022-ம் ஆண்டு டி20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இதையடுத்து, இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக் கிண்ணத் தொடரில், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் , நேபாளம், நியூசிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், நமீபியா, ஓமான், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா உகாண்டா, கனடாஆகிய 20 அணிகள் இடம் பெற உள்ளன.
இந்த 20 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்தப் போட்டிகள் ஜூன் 1-ம் திகதி முதல் 18-ம் திகதி வரையில் நடைபெறும். ஜூன் 26 மற்றும் 27-ம் திகதிகளில் முதல் மற்றும் 2வது அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்படும். கடைசியாக ஜூன் 29-ம் திகதி இறுதிப் போட்டி நடத்தப்படவுள்ளது. இந்தப் போட்டி டல்லாஸில் நடக்கிறது.
குரூப் ‘ஏ’இல் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளும், குரூப் ‘பி’இல் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமான் ஆகிய அணிகளும், குரூப் ‘சி’இல் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும், குரூப் ‘டி’இல் தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், இலங்கை, நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகளும் இடம்பெறுள்ளன.
இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த சூப்பர் 8 சுற்றானது 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகள் ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூன் 24 ஆம் திகதி வரையில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Full fixtures for the ICC Men’s T20 World Cup 2024
Sat, 1 June 2024 – USA v CANADA, Dallas
Sun, 2 June 2024 – WEST INDIES v PAPUA NEW GUINEA, Guyana
Sun, 2 June 2024 – NAMIBIA v OMAN, Barbados
Mon, 3 June 2024 – SL v SOUTH AFRICA, New York
Mon, 3 June 2024 – AFGHANISTAN v UGANDA, Guyana
Tue, 4 June 2024 – ENGLAND v SCOTLAND, Barbados
Tue, 4 June 2024 – NETHERLANDS v NEPAL, Dallas
Wed, 5 June 2024 – INDIA v IRELAND, New York
Wed, 5 June 2024 – PAPUA NEW GUINEA v UGANDA, Guyana
Wed, 5 June 2024 – AUSTRALIA v OMAN, Barbados
Thur, 6 June 2024 – USA v PAKISTAN, Dallas
Thur, 6 June 2024 – NAMIBIA v SCOTLAND, Barbados
Fri, 7 June 2024 – CANADA v IRELAND, New York
Fri, 7 June 2024 – NEW ZEALAND v AFGHANISTAN, Guyana
Fri, 7 June 2024 – SRI LANKA v BANGLADESH, Dallas
Sat, 8 June 2024 – NETHERLANDS v SOUTH AFRICA, New York
Sat, 8 June 2024 – AUSTRALIA v ENGLAND, Barbados
Sat, 8 June 2024 – WEST INDIES v UGANDA, Guyana
Sun, 9 June 2024 – INDIA v PAKISTAN, New York
Sun, 9 June 2024 – OMAN v SCOTLAND, Antigua
Mon, 10 June 2024 – SOUTH AFRICA v BANGLADESH, New York
Tue, 11 June 2024 – PAKISTAN v CANADA, New York
Tue, 11 June 2024 – SRI LANKA v NEPAL, Florida
Tue, 11 June 2024 – AUSTRALIA v NAMIBIA, Antigua
Wed, 12 June 2024 – USA v INDIA, New York
Wed, 12 June 2024 – WEST INDIES v NEW ZEALAND, Trinidad
Thur, 13 June 2024 – ENGLAND v OMAN, Antigua
Thur, 13 June 2024 – BANGLADESH v NETHERLANDS, St. Vincent
Thur, 13 June 2024 – AFGHANISTAN v PAPUA NEW GUINEA, Trinidad
Fri, 14 June 2024 – USA v IRELAND, Florida
Fri, 14 June 2024 – SOUTH AFRICA v NEPAL, St. Vincent
Fri, 14 June 2024 – NEW ZEALAND v UGANDA, Trinidad
Sat, 15 June 2024 – INDIA v CANADA, Florida
Sat, 15 June 2024 – NAMIBIA v ENGLAND, Antigua
Sat, 15 June 2024 – AUSTRALIA v SCOTLAND, St. Lucia
Sun, 16 June 2024 – PAKISTAN v IRELAND, Florida
Sun, 16 June 2024 – BANGLADESH v NEPAL, St. Vincent
Sun, 16 June 2024 – SRI LANKA v NETHERLANDS, St. Lucia
Mon, 17 June 2024 – NEW ZEALAND v PAPUA NEW GUINEA, Trinidad
Mon, 17 June 2024 – WEST INDIES v AFGHANISTAN, St. Lucia
Wed, 19 June 2024 – A2 v D1, Antigua
Wed, 19 June 2024 – B1 v C2, St. Lucia
Thur, 20 June 2024 – C1 v A1, Barbados
Thur, 20 June 2024 – B2 v D2, Antigua
Fri, 21 June 2024 – B1 v D1, St. Lucia
Fri, 21 June 2024 – A2 v C2, Barbados
Sat, 22 June 2024 – A1 v D2, Antigua
Sat, 22 June 2024 – C1 v B2, St. Vincent
Sun, 23 June 2024 – A2 v B1, Barbados
Sun, 23 June 2024 – C2 v D1, Antigua
Mon, 24 June 2024 – B2 v A1, St. Lucia
Mon, 24 June 2024 – C1 v D2, St. Vincent
Wed, 26 June 2024 – Semi 1, Guyana
Thur, 27 June 2024 – Semi 2, Trinidad
Sat, 29 June 2024 – Final, Barbados