நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 40 ரூபாவால், அதேவேளை உயிருள்ள கோழி ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விலை குறைப்பின் பின்னர் நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோகிராம் புதிய கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவாகவும், கறி கோழியின் விலை 1,000 ரூபாயாகவும், தோல் இல்லாத கோழி இறைச்சியின் விலை 980 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.