பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து நேற்று பூர்ணிமா 16 லட்சம் பணத்தை பணப்பெட்டி டாஸ்கிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியேறி இருந்தார். ஆனால் அவருக்கு 16 லட்சம் மட்டும் அல்லாமல் பிக் பாஸ் வீட்டில் 94 நாட்கள் இருந்ததற்கும் சேர்த்து அவருக்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பணம் கிடைத்திருக்கிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் பூர்ணிமா 94 நாட்கள் இருந்த நிலையில் அவருடைய மொத்த சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமாவுக்கு ஒரு நாள் சம்பளமாக 15,000 பேசப்பட்டு இருக்கிறதாம்.
அதிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் 94 நாட்கள் இவர் இருந்திருக்கிறாங்க. அதனால் அவருக்கு மொத்தமாக 14 லட்சம் சம்பளமாக கிடைத்திருக்கிறது. அதோடு பூர்ணிமா 16 லட்சம் பணப்பெட்டியும் எடுத்து இருக்கிறாங்க. அதனால் அவருக்கு 30 லட்சம் சம்பாதித்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பிக் பாஸ் வெற்றியாளராக வருபவருக்கு ஒவ்வொரு முறையும் 50 லட்சம் ரூபாய் கிடைக்கும் அதோடு சேர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிறுவனங்களும் அவருக்கு பணம் கொடுப்பார்கள்.