ஸ்வீடனில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கடும் பனியில் 1,000 வாகனங்களில் சிக்கியிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தெற்கு ஸ்வீடனின் ஸ்கேன் பகுதியில் E22 பிரதான சாலையில் சிக்கியிருந்த மக்களை மீட்க மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் பணியாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்வீடன், பின்லாந்து மற்றும் நார்வேயின் சில பகுதிகளை கடுமையான குளிர் தாக்கியுள்ளது. டென்மார்க்கில் பனிப்புயல் காரணமாக புதன் கிழமை முதல் ஆர்ஹஸ் அருகே உள்ள ஒரு நெடுஞ்சாலையில் வாகன சாரதிகளை சிக்க வைத்துள்ளன.
180 கனரக லொறிகளின் சாரதிகளை மீட்கும் பணி பின்னர் தொடங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. பயணம் தொடர முடியாமல் கார்களில் சிக்கியியிருந்த பலர் 19 மணி நேரத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.
சாலையில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவும் குடிநீரும் விநியோகம் செய்யும் பணியில் ஸ்வீடன் ராணுவம் களமிறக்கப்பட்டது. வியாழக்கிழமை காலை ஸ்கேன் பகுதியில் பேருந்துகள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.