ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள பட்டல்கல தோட்டத்தில் நேற்று மாலை வேளையில் பயணித்து கொண்டு இருந்த வேலையில் 7 பேர் பட்டல்கல தோட்ட காரியாலய பகுதியில் வைத்து குளவி கொட்டுக்கு இலக்கான, நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 78 வயது உடைய சதாசிவம் சிந்தை என்ற பெண் மரணித்து உள்ளார். மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 14 வயது சிறுவன் ஒருவன் அடங்குவதாக டிக்கோயா கிளங்கன் வைத்திய சாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
குளவி கொட்டுக்கு இலக்கான பெண் அதி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அவர் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்