MADMAX மேக்ஸ்வெல் தனி ஒருவனாக போராடி , அவுஸ்திரேலியா வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் – இப்ராஹிம் ஜத்ரான் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் 2 பவுண்டரிகளை விரட்டிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ரஹ்மத் ஷா தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் உடன் சிறப்பான ஜோடியை அமைத்தார். இந்த ஜோடியில் இப்ராஹிம் ஜத்ரான் 62 பந்துகளில் அரைசதம் விளாசினார். சுமார் 17 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்த இந்த ஜோடியில் ஒரு பவுண்டரியை விரட்டிய ரஹ்மத் ஷா 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி பேட்டிங் செய்ய வந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 37.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்திருந்தபோது, நிதானமாக விளையாடி வந்த அந்த ஹஷ்மதுல்லா ஷாஹிதி மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து அஸ்மதுல்லா ஒமர்ஜாய் பேட்டிங் செய்ய வந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 42.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்திருந்தபோது, 18 பந்துகளில் 22 ரன் அடித்திருந்த அஸ்மதுல்லா ஒமர்ஜாய், ஆடம் ஜம்பாவின் பந்தில் கிளென் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ஹு, மொஹம்மது நபி பேட்டிங் செய்ய வந்தார். இவர் வந்த வேகத்திலேயே ஜோஷ் ஹேஸில்வுட் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ரஷித்கான் பேட்டிங் செய்ய வந்தார்.
மறுமுனையில் நிலைத்து நின்று நிதானமாக விளையாடி வந்த தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜத்ரான் 131 பந்துகளில் 101 ரன் குவித்து சதம் அடித்தார். இவருக்கு ஜோடியாக விளையாடிய ரஷித்கான் அதிரடியாக வானவேடிக்கை நிகழ்த்தி ரன் குவித்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்தது. இதன் மூலம், 292 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்ய களம் இறங்கினர். இரண்டாவது ஓவரில் நவீன் உல் ஹக் பந்தில் டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 11 பந்துகளில் 24 ரன்கள் அடிட்திருந்த நிலையில், நவீன் உல்ஹக் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலியா அணி 8.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்திருந்த நிலையில், மிகவும் நிதானமாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 29 பந்துகளில் 18 ரன் எடுத்திருந்தபோது, அஸ்மதுல்லா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து பேட்டிங் செய்ய வண்த ஜோஷ் இங்லிஸ், அஸ்மதுல்லாவின் அடுத்த பந்தில் இப்ராஹிம் ஜத்ரானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வந்த வேகத்திலேயே வெளியேறினார். அடுத்து கிளேன் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்ய வந்தார்.
மிகவும் நிதானமாக விளையாடிய லபுசேன் 28 பந்துகளில் 14 ரன் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, மார்கஸ் ஸ்டோனிஸ் 6 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ரஷித் கான் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து மிட்செல் ஸ்டார்க் பேட்டிங் செயவ வந்தார். இவரும், 3 ரன் மட்டும் எடுத்து ரஷித் கான் பந்தில் ஐக்ரம் அலிகில் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார். அடுத்து, பேட் கம்மின்ஸ் பேட்டு செய்ய வந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடிய கிளென் மேக்ஸ் வெல் தனி ஆளாகப் போராடி 76 பந்துகளில் சதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்த கிளென் மேக்ஸ்வெல், 128 பந்துகளில் 201 ரன் குவித்து அதிவேக இரட்டை சதம் அடித்தார். கிளென் மேக்ஸ்வெல் தனி ஆளாகப் போராடி ஆஸ்திரேலியா அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 293 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிளென் மேக்ஸ்வெல் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *