மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் மரக்கறி வகைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி,லக்கம் நகரில் உள்ள அனைத்து மரக்கறி கடைகளில் இன்று சகல மரக்கறிகளும் இவ்வாறான விலைக்கு விற்கப்பட்டது.
கத்தரிக்காய் 1 கிலோ 640/=ரூபாவாகவும் போஞ்சி 1 கிலோ 960/= ரூபாவாகவும் பச்சை மிளகாய் 1 கிலோ 2100/= ரூபாவாகவும் ஈரப்பலாக்காய் ஒன்று 240/= ரூபாவாகவும் முட்டை கோவா 1 கிலோ 800/=ரூபாவாகவும் கேரட் 1கிலோ 960/=ரூபாவாகவும் தக்காளி 1 கிலோ 800/=ரூபாவாகவும் பீட்ரூட் 1 கிலோ 720/= ரூபாவாகவும் மரவள்ளி கிழங்கு 1 கிலோ 180/=ரூபாவாகவும் விற்பனை செய்யபட்டு வருகின்றது.