கடந்த சில நாட்களாக மஸ்கெலியா பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் முட்டை விலை அதிகரித்து உள்ளது.
நகரில் உள்ள சதொச நிருவனம் 35/= ரூபாய் வீதம் தலா ஒரு வாடிக்கையாளருக்கு 30 முட்டைகள் வழங்க பட்ட போதும் , அந்த முட்டைகள் தனியார் வர்த்தக நிலையங்களில் 60/=ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதாக பாவனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி இவ்வாறு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாவனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு சிகரட் விற்பனை அதிகரித்துள்ளது எனவும் வெளிநாட்டு சிகரட் என கூறி போலியான சிகரட் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை முன் வைக்கின்றனர்.