அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிவீரர் டேவிட் வோனர், தனது பையை எடுத்தவர்கள் அதனை மீளவும் ஒப்படைக்குமாறு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நாளையதினம் பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓய்வை அறிவித்துள்ளார் டேவிட் வோர்னர், தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் ஓய்வையும் அறிவித்திருக்கும் வோர்னர் ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.அதில் தன்னுடைய பையை யாரோ எடுத்துவிட்டதாகவும், அதை திருப்பியளித்துவிடுங்கள் எனவும் உருக்கமாக பேசி காணொளி வெளியிட்டுள்ளார்.
திருட்டுப்போனபை குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி வெளியிட்டிருக்கும் அவர், “ யாரோ என்னுடைய லக்கேஜில் இருந்த என்னுடைய பையை எடுத்துள்ளார்கள். அதில் எனது மகள்களுக்கு வாங்கிய பரிசு பொருட்களும், எனது மனதிற்கு நெருக்கமான பச்சை நிற தொப்பியும் இருக்கின்றது. அந்த பச்சை நிற தொப்பி எனக்கு உணர்வுபூர்வமானது. என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் அதை அணிந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.