ஆளுமை மிகு பெண்களே உடன் விண்ணப்பியுங்கள்..!!
கனடாவை தளமாகக் கொண்டு இயங்கும் “விழித்தெழு பெண்ணே” சர்வதேச மகளிர் அமைப்பு, ஆண்டு தோறும் ஆளுமைமிகு பெண்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கும் விழாவை நடத்தி வருகிறது.
அந்த வகையில் உலகளாவிய தமிழ்ப்பெண் ஆளுமைகளின் விருது விழா 2024 இம்முறை இலங்கை மலையகத்தின் தலைநகரமாம் கண்டியில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ளது.
பல்துறைகளிலும் கால்தடம் பதித்து சாதனைகள் பல படைத்துக்கொண்டிருக்கும் நம் பெண்களைகௌரவிக்கும் முகமாகவும் , அவர்களுக்கான சிறந்த அங்கீகாரத்தை வழங்குமுகமாகவும் ஏற்பாடு செய்யப்படவுள்ள இந்நிகழ்வில் உங்கள் சாதனைகளும் கௌரவிக்கப்படுவோர் பட்டியலில் இடம்பெறுவதற்காக இன்றே உங்கள் விண்ணப்பங்களையும் அனுப்பிவையுங்கள்.!
நீங்களும் பின்வரும் ஏதேனும் ஒரு துறையில் துறைசார் நிபுணத்துவம் பெற்றவர் என நீங்கள் கருதினால், தயங்காது உங்கள் விண்ணப்பங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
●கலை மற்றும் இசைத்துறை
●ஊடகத்துறை
●பெண் தொழில்முனைவோர்
●விளையாட்டுத்துறை
●அரசாங்க மற்றும் தனியார் துறைசார் வல்லுனர்கள்
●சமூகநல விரும்பிகள்
●சுகாதாரம் மற்றும் வைத்தியத்துறை
●விசேட சாதனைப் பெண்கள்
●ஃபேஷன் மற்றும் அழகுக்கலை
●கலாச்சாரம் மற்றும் கல்வித்துறை
●இளம்பெண் தொழில்முனைவோர்
இன்றே விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய கீழுள்ள லின்கை அழுத்தவும்.
https://vipenne.com
விழித்தெழு பெண்ணே சர்வதேச பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி சசிகலா நரேன் அவர்களின் ஏற்பாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளும் கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு இம்முறை கண்டி நகரில் நடைபெற உள்ளது.
கடந்த முறை நடைபெற்ற நிகழ்வுகளின் மூலமாக நாடளாவிய ரீதியில் பல் துறைகளையும் சார்ந்த ஆளுமை மிகு பெண்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- விண்ணப்பத்துக்கு மற்றும் விருதுகளை பெற்றுக்கொள்ள எந்தவிதமான கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
- தகுதியான பெண்கள் தயவு செய்து மேற்குறிப்பிட்ட வெப் தளத்தினூடு விண்ணப்பிக்கவும்.