இன்று (01) முதல் கரையோரப் மார்க்கத்தின் ரயில் சேவை நேர அட்டவணையை திருத்தியமைக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாத்தறை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ருஹுணு குமாரி ரயில் இன்று அதிகாலை 5.25 மணியளவில் பெலியத்த ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்தது.
இதுவரை வார நாட்களில் மட்டும் இயங்கி வந்த சகாரிகா கடுகதி ரயில் சேவை, சனிக்கிழமைகளிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் வார நாட்களில் இரவு 8.35 மணிக்கு மருதானையில் இருந்து தெற்கு பயாகலை வரை இயக்கப்படும் ரயில் இன்று முதல் அளுத்கம வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மருதானையில் இருந்து அளுத்கம வரை பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் ரயில் இன்று முதல் பிற்பகல் 1.55 மணிக்கு மருதானையில் இருந்து அளுத்கம வரை இயக்கப்பவுடள்ளது.
இந்த ரயில் நேர அட்டவணை திருத்தம் தொடர்பில் இரண்டு வாரங்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னர், தொடர் நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.