இலங்கையின் பிரபல சுயாதீன ஊடகவியலாளர் முகுந்தன் சுந்தரலிங்கத்திற்கு “கௌரவ டாக்டர் பட்டம்” வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஊடகத்துறையில் மூன்று தசாப்த காலமாக மகத்தான அனுபவத்தை கொண்டுள்ள அவருக்கு, இந்த பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளனர்.அமெரிக்கா போன்ற நாடுகளில் ஊடகம் தொடர்பிலான பயிற்களைய்ம் அங்கீகாரத்தையும் பெற்று சுமார் இருபத்தேழு வருடங்களுக்கு மேலாக வானொலி தொலைக்காட்சி மற்றும் சமூகவலைத்தளங்களூடாக ஊடகராக சிறந்த முறையில் மக்கள் நலன் நோக்காகக் கொண்டு செயலாற்றிவருவதை கௌரவித்தும் ஊக்குவித்தும் இவ் உயரிய கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
பேராசிரியர் கலாநிதி சரத் சில்வா மற்றும் கலாநிதி அமுதா கோபாலன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் இலங்கையின் பிரபல ஊடகங்கள் பலவற்றில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முகுந்தன் சுந்தரலிங்கத்திற்கு வைஃப்ஸ் நியூஸ் தமிழின் வாழ்த்துகள்.