அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.
10 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்படும் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.
ISPL T10 என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் போட்டியில், சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஸ்ரீநகர் என 6 அணிகள் பங்கேற்க உள்ளன. Indian Street Premier League என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில், நட்சத்திர வீரர்கள் அல்லாது உள்ளூர் அளவில் நல்ல திறமையோடு வெளிச்சம் பெறாமல் உதவி வேண்டி நிற்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.
மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை ராம் சரணும் வாங்கியுள்ளனர். சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் சூர்யா வெளியிட்டுள்ளார். கிரிக்கெட்டில் புதிய பாரம்பரியத்தை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
https://x.com/Suriya_offl/status/1739883136669114873?s=20