DFCC வங்கி தனது பெறுமதிமிக்க கடன் மற்றும் டெபிட் அட்டைதாரர்களுக்கு பல்வேறுபட்ட கவர்ச்சியான, பிரத்தியேக சலுகைகளை வழங்கி, பண்டிகைக்காலத்தை வரவேற்கும் வகையில் மிகச் சிறந்த பண்டிகைக்கால வரப்பிரசாதங்களை மகிழ்ச்சியுடன் வழங்குகின்றது.
DFCC வங்கி வாடிக்கையாளர் திருப்தி மீது தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் அடிக்கோடிட்டுக்காட்டும் வகையில், பல்வகைப்பட்ட தேவைகள் மற்றும் தெரிவுகளை நிறைவேற்றும் முகமாக 400 க்கும் மேற்பட்ட கூட்டாளர் வணிக மையங்களில் 75% வரையான ஒப்பற்ற சேமிப்புக்களை வழங்கி, அனைவரினதும் எதிர்பார்ப்புக்களையும் மிஞ்சுவதற்கு DFCC வங்கி தயாராகவுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு உண்மையான பெறுமதியை வழங்க வேண்டும் என்ற தனித்துவமான அர்ப்பணிப்புடன், DFCC வங்கி அட்டைதாரர்கள் தெரிவு செய்யப்பட்ட தமது அட்டைகளை உபயோகித்து மேற்கொள்கின்ற ஒவ்வொரு கொள்வனவுக்கும் 1% முதல் 3% வகையான CashBack எனப்படும் பணமீளளிப்பு சலுகையை வங்கி அவர்களுக்கு வழங்குகின்றது.
மேற்குறிப்பிட்ட பணமீளளிப்பானது அட்டைதாரரின் தெரிவுக்கு அமைவாக, எந்தவொரு DFCC வங்கிக் கணக்கிற்கும் வரவு வைக்கப்பட்டுவதுடன், செலவு செய்யும் பணத்திற்கு உண்மையான பெறுமதியை அவர்களுக்கு வழங்குகின்றது. சேமிப்புக் கணக்கிற்கு வரவு வைக்கப்படும் போது, அதற்கு வட்டியும் கிடைப்பதால், இதுவொரு இரட்டிப்பு வெகுமதியாக அமையப்பெறுகின்றது.
சந்தையில் முன்னிலை வகிக்கும் இந்த வெகுமதிகளும், புதுமையான அனுபவங்களும் வங்கிச்சேவை உறவுமுறையின் போது ஒவ்வொரு படியிலும் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியை வழங்குவதற்கு ஒரு உண்மையான சான்றாகும். “வாடிக்கையாளரை-மையமாகக் கொண்ட” செயல்பாடு என்ற பிரதான விழுமியத்துடன், இப்பண்டிகைக்காலத்தில் அதிகபட்ச நிதியியல் நெகிழ்வுத்தன்மை மற்றும் சேமிப்புக்களை வழங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு தீவிரமாக உதவுவதில் அனைத்து எதிர்பார்ப்புக்களுக்கும் மேலாக DFCC வங்கி செயல்பட்டு வருகின்றது. அட்டைதாரர்களின் ஆசைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் பண்டிகைக்கால வெகுமதிகளை வழங்குவதற்காக தனது பிரத்தியேக வணிக கூட்டாண்மைகளையும் விரிவுபடுத்தி, நேர்மறையானதொரு மாற்றத்திற்கு வங்கி வழிகோலியுள்ளது.
இந்த வகையில், கூட்டாளர் வணிக மையங்களுடன் ஒன்றிணைந்து வட்டியின்றிய இலகு தவணைக்கொடுப்பனவுத் திட்டங்களையும் DFCC வங்கி வழங்கி வருகின்றது. மேலும், அட்டையின் மூலமான கடன் (Loan on Card) மற்றும் ஏனைய வங்கிகளின் அட்டைகளிலுள்ள நிலுவையை இந்த வங்கியின் அட்டைக்கு மாற்றிக்கொள்ளும் வசதி (Balance Transfer) போன்ற தெரிவுகளையும் வங்கி வழங்குகின்றமையானது தனது வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வுப்போக்குடனான நிதியியல் தீர்வுகளை வழங்கி, அவர்களுக்கு வலுவூட்டுவதில் வங்கியின் அர்ப்பணிப்புக்கு சான்று பகருகின்றது.
பிரத்தியேகமான வருட இறுதி சலுகைகள் குறித்து DFCC வங்கியின் துணைத் தலைவரும், அட்டை மையத்தின் தலைமை அதிகாரியுமான டென்வர் லூயிஸ் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “பண்டிகைக்காலம் என்பது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொழுதுபோக்கு என நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிடும் காலமாகும். எமது அட்டைதாரர்களை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தும் வகையில் விரிவான, பல்வகைப்பட்ட சலுகைகளை நாம் ஒன்றுதிரட்டியுள்ளதுடன், இந்த வாய்ப்பினை தவறவிடாது பயன்படுத்தி, நன்மைகளை அனுபவிக்குமாறு அழைப்பு விடுகின்றோம். ஆண்டு நிறைவடையவுள்ள தறுவாயில், தனது வாடிக்கையாளர்களுக்கு உதவி, பண்டிகைக்காலத்தை மகிழ்ச்சியானதாகவும், வெகுமதியளிப்பதாகவும் மாற்றியமைப்பதற்கு DFCC வங்கி உறுதிபூண்டுள்ளது. இந்த ஆண்டில் எம்மீது விசுவாசத்துடன் செயல்பட்ட எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கும் அதேவேளை, மகிழ்ச்சிபொங்கும் பண்டிகைக்கால வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கி மாஸ்டர்காட் மற்றும் வீசா அட்டைகள் பல்வேறுபட்ட திட்டங்களின் கீழ் விநியோகிக்கப்படுவதுடன், வங்கியின் பல்வகைப்பட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பம்சங்களையும், நன்மைகளையும் வழங்குகின்றன. மகளிருக்கு வலுவூட்டுவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்ற வங்கியாக, மகளிரை மையமாகக் கொண்ட DFCC ஆலோக கடன் மற்றும் டெபிட் அட்டைகளை DFCC வங்கி வழங்குவதுடன், இவை மகளிருக்கு விசேட வரப்பிரசாதங்கள், சலுகைகள் மற்றும் நன்மைகளை பிரத்தியேகமாக வழங்குகின்றன. ஆகவே உங்களுடைய DFCC கடன் மற்றும் டெபிட் அட்டைகளின் துணையுடன், முன்னெப்போதும் அனுபவித்திராத வகையில் பண்டிகைக் கொண்டாட்டங்களை அனுபவித்து மகிழுங்கள். கிடைக்கப்பெறும் சலுகைகள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள www.dfcc.lk என்ற வங்கியின் வர்த்தக இணையத்தளத்தைப் பாருங்கள்.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 ஆண்டுகால வளமான வரலாற்றைக் கொண்ட முழுமையான சேவைகளை வழங்கும் ஒரு வணிக வங்கி என்பதுடன், பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. அதன் நிலைபேற்றியல் மூலோபாயம் 2020-2030 இன் ஒரு பகுதியாக, வங்கியானது நெகிழ்திறன் கொண்ட வணிகங்களை தோற்றுவித்தல் மற்றும் பசுமை நிதிவசதி மற்றும் நிலைபேண்தகு, சமூகப் பொறுப்புணர்வுள்ள தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம் மகத்தான நெகிழ்திறனுக்கு பங்களிப்பதில் ஒரு முன்னணி நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஐக்கிய இராச்சியத்தின் Global Brands சஞ்சிகையால் 2021 இல் இலங்கையில் Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand மற்றும் Euromoney இன் Market leader in Cash Management 2022 உட்பட பல பாராட்டுக்களையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது.
மேலும், DFCC வங்கியானது Business Today சஞ்சிகையால் இலங்கையின் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்களின் தரவரிசையிலும் பெயரிடப்பட்டுள்ளதுடன், Fitch Ratings Lanka Limited ஆல் A- (lka) தரப்படுத்தப்பட்டு, இலங்கை மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. நிலைபேற்றியலுக்கான அதன் அர்ப்பணிப்பிற்கு சான்றளிக்கும் வகையில், இலங்கையில் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund – GCF) அங்கீகாரத்தைப் பெற்ற முதன்முதலான மற்றும் தற்போது வரையான ஒரேயொரு நிறுவனம் DFCC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் காலநிலைத் தணிவிப்பு மற்றும் அது சார்ந்த மாற்றத்தை உள்வாங்கும் செயல்திட்டங்களுக்கு ஆதரவாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சலுகை நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.