விகாரமஹாதேவி பூங்காவுக்கு வரும் இளைஞர் – யுவதிகள் அநாகரீகமாக நடந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பூங்காவில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்த தற்காப்பு படையைச் சேர்ந்த 80 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு நடந்துகொண்டால் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று எச்சரிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.