காஸா மக்களுக்கு 1000 கிலோ தேயிலையை வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் போன்ற உதவிகளை சேகரிக்கவும், நிவாரணம் வழங்கவும் சிறப்பு திட்டத்தை சவுதி அரசு தொடங்கியுள்ளது. உதவியை சவுதி அரேபிய அரசு மூலம் காசா பகுதிக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை தேயிலை சபையினால் வழங்கப்பட்ட இந்த நன்கொடை, சிறி லங்கன் விமான சேவையினால் சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு விரைவில் கொண்டு செல்லப்படவுள்ளது.