கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படும் இன்று (25) சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்து பயணத் திட்டங்கள் இன்று இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட தூர சேவைகளுக்காக சுமார் 100 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதுடன், இன்றும் தேவைக்கு ஏற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ண ஹன்சா தெரிவித்தார்.