சி.எஸ்.கே அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி இன்னும் 10 நாட்களில் துடுப்பாட்ட பயிற்சியை தொடங்கவுள்ளதாக அந்த அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் தோனியின் காலில் ஏற்பட்ட உபாதை ஒன்றின் காரணமாக அவர் அறுவை சிகிச்சை ஒன்றை எதிர்கொண்டுள்ளார்.
டேரல் மிட்செல் 14 கோடி இந்திய ரூபாய்க்கும், சமீர் ரிஸ்வி 8.4 கோடி இந்திய ரூபாய்க்கும் மற்றும் ரச்சின் ரவீந்திரா 1.8 கோடி இந்திய ரூபாய்க்கும் சி.எஸ்.கே அணியால் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.